Home
Quotes New

Audio

Forum

Read

Contest


Write

Write blog

Log In
Your search for Deepa
மதங்கொண்ட யானையாய் மதம் கொண்ட மனிதன்
 15 June 2020  

வணக்கம்!!!  இப்பதிவினை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள், வன்மையாகக் கண்டிப்பவர்கள் மற்றும் அறிவுரை கூற நினைப்பவர்கள் என ஆர்வமுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பதிவின் தொடரை விருப்பமிருந்தால் நீங்களும் எழுதலாம்!! நான் கட்டாயம் தொடர்வேன்!!😄😄மதங்கொண்ட யானையாய் மதம் கொண்ட மனிதன்ஜீவராசிகளில் சுகவாசி மனிதன்! உயிர்வாழ்தல் என்பது அவனுக்கு மழைக்கால நீரோட்டம் போலாகிவிட்டது. அதன் சூட்சமங்களை அவன் கூறுபோட்டு கற்றுக்கொண்டுவிட்டான். இயற்கையும் கூட அவனுக்குப் பரிணாம ரீதியில் பங்காளியாகிவிட்டிருக்கிறது. எனவே வெறுதே வாழ்வதைத் தாண்டி சுகமாக வாழ்தல் என்பது அவனது அடிப்படைத் தேவையாக பதவி உயர்வு பெற்றிருக்கிறது. இவ்வாறு சுகத்திற்கான தேடல் வேட்டையில் மனிதன் வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு அமைப்புகளை அமைத்துக்கொள்கிறான்.அவ்வமைப்புகளில் மதம், அரசியல், அறிவியல் இவை மூன்றும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இவற்றின் மீது அவன் சாய்ந்து கொள்கிறான், இளைப்பாறிக் கொள்கிறான், சவாரியும் செய்கிறான். பெரும்பாலும் இவ்வமைப்புகளைச் சுற்றியே அவனின் நம்பிக்கை வலை பின்னப்படுகிறது, வாழ்க்கைமுறை தீர்மானிக்கப்படுகிறது. ஆம்! நம்பிக்கை ஒருவகை வலைதான். அதனுள் வாழ பழகிக்கொண்டவன் அதன் சுகத்தில் சிக்கிக்கொள்கிறான். அதைத்தாண்டி சிந்திக்க மறுக்கிறான், மற்றபிற வலைகளின் தன்மையை உணர முற்பட யோசிக்கிறான், பிற வலைகளுக்குள் கிடைத்ததாக கற்பனைசெய்துகொள்ளப்பட்ட சுகத்தை நிராகரிக்கிறான். உலக வரலாற்றை அறிய முற்படும்போது, அரசியல் என்னும் வலை பெரும்பாலும் மதம் என்னும் வலைக்குள் பின்னிப் பிணையப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. காலத்திற்கு ஏற்றாற்போல் ஏதோ ஒன்று மற்றதின் கைபொம்மையாய் ஆட்டிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக அறிவியல். இந்த வலையும் கூட நம்பிக்கையெனும் நூலிழையில் பின்னப்படுடிருந்தாலும், அனுமானங்களைத்தாண்டி ஆதாரம் எனும் முடிச்சால் இறுக்கப்பட்டிருக்கிறது. அனுமானங்கள் புலன்களின் முதல் மறுமொழியாக இருக்கலாம் ஆனால் அவைகளே தீர்மானங்களாகிவிடாது. அனுமானங்களைக் கடந்து அறிவுத்திறனுடன் பயணிப்பதற்கே பரிணாமம் எல்லா உயிர்களையும் அழைத்துச்செல்கிறது.அறிவுத்திறனின் முதல் மொழி வியப்பு. வியப்பினால் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளின் திரட்சியாகவே நான் உயிர்பந்தான இன்றைய பூமியை உள்வாங்கிக்கொள்கிறேன்! இதன் அடிப்படையில் மனிதர்களை இரண்டு வகைப்படுத்திப் பார்க்கிறேன். வியக்கத்தெரிந்தவர்கள், வியக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் முதலாமவர்கள் கலைஞராகிறார்கள் அல்லது அறிவியலால் உந்தப்படுபவர்களாகிறார்கள். வியப்பு இவர்களை படைக்க வைக்கிறது. ஆதலால் படைப்பின் நெகிழ்வுத்தன்மை இவர்களுக்குப் புரிகிறது.எனவே இவர்களுள் பலர் படைப்பிற்கு முகம் தேடுவதுமில்லை, அதனை வழிபடுவதுமில்லை. இரண்டாமவர்கள் மதவாதிகளாகிறார்கள். அவர்களுக்கு எல்லா காலக்கட்டங்களிலும் தங்களை வழிநடத்த, வியக்கக் கற்றுக்கொடுக்க ஒரு உந்துபொருள் தேவைப்படுகிறது. படைப்பு என்பது இவர்களுக்கு வியப்பு என கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆதாலால் இவர்கள் படைப்பிற்கு முகம் தேடுகிறார்கள், அதற்கு பயப்படுகிறார்கள், அதனை வழிபடத்தொடங்குகிறார்கள், அதனிடம் தங்களை ஒப்படைத்தும் விடுகிறார்கள். புவியின் பல்வேறு நிலப்பரப்பில் மனிதன் சிதறிக்கிடப்பதால், அவரவர்களுக்கு பரிட்சயமான முகத்தை படைப்பின் முகமாக சித்தரித்து விட்டார்கள். தங்கள் பயத்தை பரப்பிவிட, அதன் தீயில் குளிர்காய கூட்டாளிகளைத் திரட்டவும் புறப்பட்டு விட்டார்கள் இந்த மதவாதிகள்!!!                                                                                                                                                           தொடரும்.....

மதங்கொண்ட யானையாய் மதம் கொண்ட மனிதன்
 15 June 2020  
Art

வணக்கம்!!!இப்பதிவினை ஆமோதிப்பவர்கள், மறுப்பவர்கள், வன்மையாகக் கண்டிப்பவர்கள் மற்றும் அறிவுரை கூற நினைப்பவர்கள் என ஆர்வமுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பதிவின் தொடரை விருப்பமிருந்தால் நீங்களும் எழுதலாம்!! நான் கட்டாயம் தொடர்வேன்!!😄😄மதங்கொண்ட யானையாய் மதம் கொண்ட மனிதன்ஜீவராசிகளில் சுகவாசி மனிதன்! உயிர்வாழ்தல் என்பது அவனுக்கு மழைக்கால நீரோட்டம் போலாகிவிட்டது. அதன் சூட்சமங்களை அவன் கூறுபோட்டு கற்றுக்கொண்டுவிட்டான். இயற்கையும் கூட அவனுக்குப் பரிணாம ரீதியில் பங்காளியாகிவிட்டிருக்கிறது. எனவே வெறுதே வாழ்வதைத் தாண்டி சுகமாக வாழ்தல் என்பது அவனது அடிப்படைத் தேவையாக பதவி உயர்வு பெற்றிருக்கிறது. இவ்வாறு சுகத்திற்கான தேடல் வேட்டையில் மனிதன் வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு அமைப்புகளை அமைத்துக்கொள்கிறான்.அவ்வமைப்புகளில் மதம், அரசியல், அறிவியல் இவை மூன்றும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இவற்றின் மீது அவன் சாய்ந்து கொள்கிறான், இளைப்பாறிக் கொள்கிறான், சவாரியும் செய்கிறான். பெரும்பாலும் இவ்வமைப்புகளைச் சுற்றியே அவனின் நம்பிக்கை வலை பின்னப்படுகிறது, வாழ்க்கைமுறை தீர்மானிக்கப்படுகிறது. ஆம்! நம்பிக்கை ஒருவகை வலைதான். அதனுள் வாழ பழகிக்கொண்டவன் அதன் சுகத்தில் சிக்கிக்கொள்கிறான். அதைத்தாண்டி சிந்திக்க மறுக்கிறான், மற்றபிற வலைகளின் தன்மையை உணர முற்பட யோசிக்கிறான், பிற வலைகளுக்குள் கிடைத்ததாக கற்பனைசெய்துகொள்ளப்பட்ட சுகத்தை நிராகரிக்கிறான். உலக வரலாற்றை அறிய முற்படும்போது, அரசியல் என்னும் வலை பெரும்பாலும் மதம் என்னும் வலைக்குள் பின்னிப் பிணையப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. காலத்திற்கு ஏற்றாற்போல் ஏதோ ஒன்று மற்றதின் கைபொம்மையாய் ஆட்டிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக அறிவியல். இந்த வலையும் கூட நம்பிக்கையெனும் நூலிழையில் பின்னப்படுடிருந்தாலும், அனுமானங்களைத்தாண்டி ஆதாரம் எனும் முடிச்சால் இறுக்கப்பட்டிருக்கிறது. அனுமானங்கள் புலன்களின் முதல் மறுமொழியாக இருக்கலாம் ஆனால் அவைகளே தீர்மானங்களாகிவிடாது. அனுமானங்களைக் கடந்து அறிவுத்திறனுடன் பயணிப்பதற்கே பரிணாமம் எல்லா உயிர்களையும் அழைத்துச்செல்கிறது.அறிவுத்திறனின் முதல் மொழி வியப்பு. வியப்பினால் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளின் திரட்சியாகவே நான் உயிர்பந்தான இன்றைய பூமியை உள்வாங்கிக்கொள்கிறேன்! இதன் அடிப்படையில் மனிதர்களை இரண்டு வகைப்படுத்திப் பார்க்கிறேன். வியக்கத்தெரிந்தவர்கள், வியக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் முதலாமவர்கள் கலைஞராகிறார்கள் அல்லது அறிவியலால் உந்தப்படுபவர்களாகிறார்கள். வியப்பு இவர்களை படைக்க வைக்கிறது. ஆதலால் படைப்பின் நெகிழ்வுத்தன்மை இவர்களுக்குப் புரிகிறது.எனவே இவர்களுள் பலர் படைப்பிற்கு முகம் தேடுவதுமில்லை, அதனை வழிபடுவதுமில்லை. இரண்டாமவர்கள் மதவாதிகளாகிறார்கள். அவர்களுக்கு எல்லா காலக்கட்டங்களிலும் தங்களை வழிநடத்த, வியக்கக் கற்றுக்கொடுக்க ஒரு உந்துபொருள் தேவைப்படுகிறது. படைப்பு என்பது இவர்களுக்கு வியப்பு என கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆதாலால் இவர்கள் படைப்பிற்கு முகம் தேடுகிறார்கள், அதற்கு பயப்படுகிறார்கள், அதனை வழிபடத்தொடங்குகிறார்கள், அதனிடம் தங்களை ஒப்படைத்தும் விடுகிறார்கள். புவியின் பல்வேறு நிலப்பரப்பில் மனிதன் சிதறிக்கிடப்பதால், அவரவர்களுக்கு பரிட்சயமான முகத்தை படைப்பின் முகமாக சித்தரித்து விட்டார்கள். தங்கள் பயத்தை பரப்பிவிட, அதன் தீயில் குளிர்காய கூட்டாளிகளைத் திரட்டவும் புறப்பட்டு விட்டார்கள் இந்த மதவாதிகள்!!!                                                                                                                                                      தொடரும்.....