Image

எது சரி? எது தவறு?
என்பது செயலில் இல்லை.
அந்த செயலின் விளைவில் உள்ளது.
விளைவின் அடிப்படை செயல் என்பதால்
சரியா? தவறா? என்று செயலை பற்றி
விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.
எல்லோரும் செயலை சரி,தவறு என்ற மதீப்பீட்டில் அணுகும்போது அது தங்கள் உரிமையில் தலையிடுவதாக நினைக்கின்றனர்..
ஆனால்
செயல் ஏற்படுத்தும் விளைவிற்கு பொறுப்பேற்க சொன்னால் ஒருவரும் தயாராய் இல்லை.
பொறுப்பேற்காத உரிமை என்பது சர்வாதிகாரம்.

சரி தவறு என்பது மனிதனாக ஏற்படுத்திக்கொண்டது தான்.அதனால் எதுவுமே தவறில்லை.So இந்த வாழ்க்கையை என்ஜாய் செய்யலாம் என்று சொல்வோரும் உண்டு.

எல்லா செயலுக்குமே விளைவுகள் இருக்கிறது..எல்லோரும் எல்லா செயலையும் செய்ய முடியும்  அதில் தவறென்ன என்று கேட்கவும் முடியும்.ஆனால் விளைவுகளை எதிர்கொள்ளும் வலிமை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது.

இதனால் தான் இது சரி,இது தவறு என்கிற Morality ஐ சமூகமும் அதனை தொடர்ந்து பெரும்பான்மையான மக்களும் கடைபிடிக்கின்றனர்.ஏனெனில் பெரும்பான்மையானோர் விளைவுகளை சந்திக்கவே விரும்புவதில்லை..

வெறும் பேச்சுக்கு, தங்களை வித்தியாசமாக நினைப்பவர்கள் வேண்டுமானால்,சரி தவறு எல்லாமே நம் பார்வையில் தான் இருக்கிறது என்று Morality ஐ subjective ஆக அணுகக்கூடும்.
ஆனால் இவர்கள் பெரும்பாலும் அந்த செயல்களின் விளைவுகளை பற்றி யோசிக்காமலேயே இவ்வகையில் சிந்திக்கின்றனர்.

இந்த சரி,தவறு என்கிற Morality என்பது மனிதனின் எல்லைகள்.மனிதன் ஒழுக்கின்மை(Chaos) என்னும் பெருவெள்ளத்தில் விழுந்துவிட கூடாது அதன் விளைவுகளை அவனால் சந்திக்க இயலாது மற்றும் தன் குறிக்கோளை நோக்கிய பயணத்திற்கு மிகப்பெரிய தடைகல்லாக இருப்பதால் தர்க்கப்பூர்வமாகவும்,அனுபவரீதியாகவும் மனிதன் தனக்குதானே ஏற்படுத்திக்கொண்ட ஒரு Discipline.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்  அணுவைப்பிளப்பது போல...அந்த எல்லையை உடைத்தால் ஊரே அழிந்துவிடும்.அது chaos தானே.
சரி,தவறு என்னும் எல்லைகள்
இருக்கும் போது மட்டுமே Chaos இடம் இருந்தும் அது தரும் வலியும்,வேதனையிலிருந்து மனிதன் தன்னை தற்காத்துக்கொள்ள முடியும்.

சரி,தவறு என்பது நம் வாழ்வு ஒழுக்கினமையில் விழாதபடி பார்த்துகொள்ள நாம் கண்டடைந்த யதார்த்த விதிகள்..

இது எல்லோருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும்..
ஆனால் இதை அப்படியே கடைபிடித்தால் இன்பத்திற்காக ஏங்குபவர்களால் இன்பத்தை தொலைக்க வேண்டி இருப்பதால் தங்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றயமைத்துக்கொள்கின்றனர்.அப்போது தான் சரி,தவறு என்பது ஒவ்வொருவருக்கும் மாறும்..என்று அதற்கு சப்பைகட்டு கட்டுவார்கள்..

இன்பத்திற்காக மாற்றயமைக்கபப்ட சரி..தவறாக போகும் பட்சத்தில்..விளைவுகளின் துன்பம் வந்து அவர்களை துவட்டி எடுக்கும் போது தான்..

சரி,தவறு என்று இருக்கிறது..அதை நமக்கு ஏற்றவாறு மாற்றயமைத்தது தவறு என்று உணர்ந்து புத்தி தெளியும்
'மகிழ்ச்சி' என்று பெரும்பான்மையானவர்களால் நம்பப்படுவது ஒரு அற்பமான உணர்வு.
Happiness is a Shallow pleasure.
ஆனாலும் நம்மவர்கள் ஒரு தெருநாய்
மோட்டார் வண்டியை துரத்துவது போல்..இன்பத்திற்காக விடாமல்
சுயத்தை இழக்கும் போதையிலும் மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்கிறோம்

அப்ப மகிழ்ச்சியாகவே இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா?.
இல்லை மகிழ்ச்சி எது என்பதே நமக்கு தெரிவில்லை என்றுதான் சொல்கிறேன்.

'மனநிறைவு' தான் மகிழ்ச்சி என்று சொல்கிறேன்..
மனநிறைவு என்றால் போதும் என்று நினைக்கின்ற மனம் தான் மகிழ்ச்சியா?
அதுவும் இல்லை..
நாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம் அதை வாங்கிவிட்ட மிதப்பில் துள்ளி குதிக்கிறோம்..ஆனால் ஒரு வாரத்தில் அந்த மகிழ்ச்சி காணாமல் போகிறதே எப்படி?
சரி நமக்கு இருப்பதே போதும் என்று நினைக்கிறோம்.
அதுவும் நமக்கு  மகிழ்ச்சி தருகிறதா?
இல்லையே..வெறுமையை அல்லவா அது விட்டுச்செல்கிறது..

ஆனால் இதையே ஒரு ஆக்கப்பூர்வமான விஷயத்தில் ஈடுபட்டு அதில் உங்களின் சிந்தையை,உழைப்பும் செலுத்தி அதில் பல இன்னல்களை கடந்து ஒருவழியாக வெற்றிபெறும் போது வரும் உணர்வு இருக்கிறதே..

அது தான் மனநிறைவு..
அது தான் மகிழ்ச்சி..
'உருவாக்குதல் தான் மகிழ்ச்சி'
'Happiness is something that we ' create ' for ourselves'  என்று சொல்வார்களே..அதற்கு அர்த்தம் இதுதான்.
To 'Create' something on your own is happiness..

அந்த மகிழ்ச்சியை நீங்கள் முதுமையடைந்து மரணபடுக்கையில் இருக்கும்போது உங்களை சுற்றியுள்ளவர்களிடம் அதை பெருமிதத்துடன் சொல்லி கடைசிமூச்சை விடுவீர்கள்..

அந்த மனநிறைவு தான் மகிழ்ச்சி :)